இரட்டைக்கொம்புக்கிடையில் இறைவன் பதம்

நேர்பாதி தேவியும் நேர்பாதி வேணியனும்
சேர்நஞ்சால் நோகின்றார் கேளீரே!(ன்)?- நேர்சிவனே
மேவுகண்டஞ் சேர்நஞ்சைத் தேவியின்கை தேக்கியதால்
மேவுநட மோவிடையின் மேல்

கேளீரே-உறவே
கேளீரே!(ன்)=கேளீர்+ஏன்,கேட்காதது ஏன்

எழுதியவர் : சு.ஐயப்பன் (27-Nov-15, 12:45 pm)
பார்வை : 97

மேலே