குடையாய், விசிறியாய்

..............................................................................................
வெயிலுக்குக் குடையாய்....
வியர்த்தால் விசிறியாய்...
குளிருக்குப் போர்வையாய்....
குளித்தபின் துவாலையாய்..

சறுக்கு மரமாய்.. ஊஞ்சலாய்..
சந்தடி காட்டாமல் ஒளியும் மறைவாய்...
சடுதியில் ஏறும் புகை வண்டியாய்..
சிறகடித்துப் பட்டுப் பூச்சியாய்..
தேவதையாய், வானவில்லாய்..

ஆனந்தமாய், அரவணைப்பால்
ஆகாயத்தில் மிதந்திடும் கனவுக் கொட்டிலாய்,
ஆபத்பாந்தவனாய்.. ஆறுதலாய்..
தைரியம் கொடுத்துத் தழுவி நிற்கிறது..
அம்மா வாசம் கமழும்
அம்மாவின் சேலை...!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Nov-15, 11:10 am)
பார்வை : 109

மேலே