வானம்
ஓர்
உயிர் கொள்ளும்
உறுப்பெல்லாம்
கர்ப்பப்பைகளாய்
மாற்றம் பெறும்
கன்னக்குழியும்
பொதி சுமக்கும்
கண்கள் புத்துயிர் பெற்று
வெறி கொள்ளும்
பெருஞ்சுவாசம்
இரத்தக் குழாய்களை
அடைக்கும்
வண்ணத்திப்பூச்சியாய் மனம்
பூக்களில் சிறகடிக்கும்
இரத்தச் சகதியில்
கையலம்பி உயிர்த்தெழும்
உயிரோடு உயிரூட்டும்
விழித்துக் கதற
வலி மறக்கும்
கனவுகள் அடக்கி
முட்டைகளாய் மீண்டும்
ஏப்பம் விடும்
ஊதிப்பெருத்து
திசைகளை விழுங்கும்
மீண்டும்
அதே நிலவொளிக்காக
விரிந்து உயிர் கொள்ளும்
வானம். .....