ஒரு மதிய நேரத்து பழமொன்ரியுக்கள்

அகல உழுகிறதை விட
ஆழ உழத்தான் ஆசை..
ஆற்றில் மணல் அதிகம்!

******************************************
அந்தி மழை அழுதாலும் விடாது ..
ஆனாலும் இந்த சென்னை மழை
அதுக்கும் மேலே..!.

******************************************

அஞ்சிலே வளையாதது
ஐம்பதிலே வளையலாம் ..
அரசியல்ல சேரணும்!

******************************************
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
என்பதெல்லாம் சரிதான்..
மடத்திற்கு யாரெல்லாம் வருவார்?

******************************************
இறுகினால் களி , இளகினால் கூழ்...
இருமினால் சளி, இளவலால் வலி..
வாரிசுகளுக்கு வேலை கொடு!

******************************************

உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா
என்றெல்லாம் கேட்கக் கூடாது ..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

எழுதியவர் : பாலகங்காதரன் (28-Nov-15, 3:10 pm)
பார்வை : 125

மேலே