ம்

பின்னிக் கொண்டிருந்த
வலைக்குள் மனதாகிறது,
உள் புகுந்த வெளியிருந்த
எச்சம்.......
நகம் கீறும்
விழி தடங்களின்
அகத்தின் சாயலைக்
கொண்டாடிச் சாய்கிறது
அச்சம்....
முத்தமிட்ட இடமெல்லாம்
தழும்பாகித் தவிக்கும்
பேரின்ப மாயக் கனவாகி
விட்டதோ மிச்சம்...
கத்திச் சாகும் தவிப்புகளின்
தீரும் வண்ணக் குரலின்
வரட்சியில் பிரிவாய்
வழிகிறது துச்சம்....
பெருங்காதல் குறுஞ்செய்திக்குள்
நிர்வாண மனமாய் கடவுளின்
இருட்டுக்குள் இப்போதெல்லாம் நம்
வெளிச்சம்...
கவிஜி