இனியவன் ஹைக்கூகள்

ஒப்பாரி வீட்டிலும் அழகு
ஒன்றுகூடலிலும் அழகு
-------மலர் மாலை---------

@@@

தொண்டனுக்கு பிழைப்பு
தலைவனுக்கு உழைப்பு
-------தேர்தல் -----------

@@@

உடல் முழுதும் நெருப்பு த்துளை
வருத்தினாலும் இன்பம் தருகிறது
-------புல்லாங்குழல் -------

@@@

இன்பமென நினைத்து
இன்பத்தை இழக்கிறான்
-----குடிகாரன் -----

@@@

வானம் திரவமாய் தரும் தங்கம்
நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்
-----பருவ மழை ------

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Dec-15, 6:29 pm)
Tanglish : iniyavan haikkookal
பார்வை : 106

மேலே