ஊரறிந்த பைத்தியம்

ஊரறிந்த பைத்தியம்
**************************

சாலையோர டீக்கடை...
காலை நேரம்...
வாடிக்கையாளர் கூட்டம்...

அடுப்புல பால் பொங்குது...
எண்ணையில போண்டா கொதிக்குது...

பரபரப்பான விற்பனையில் எப்பவுமே இருந்தால் கூட...
அந்தக்கடையில்...

அண்ணாச்சி ஒரு டீ, ஒரு வடை...
கணக்குல வச்சிக்கேங்க...

என்று சொல்லும் ஒரு கூட்டம்...
இருந்து கொண்டேதான் இருக்கும்...

கடைக்கு எதுத்தாப்புல...

அழுக்கு தாடியுடன்...
கிழிஞ்ச சட்டபோட்டு...
ஒத்தக்கால் செருப்புடன்...
ஒருத்தன் இருப்பான்...

பாக்குற எல்லோருக்கும் அவன்...
ஒரு பைத்தியம்...

ஊருக்குள்ள கேட்ட சொல்லுவாங்க...
எல்லோரும் அவனப்பத்தி...

நல்ல படிச்சிருக்கான்...
எப்படி திடீர்ன்னு இப்படி
ஆனான்னு தெரியலைன்னு...

எப்பவுமே...
யாரப்பார்த்தாலும் ஈன்னு சிரிப்பான்...
காசு கொடுத்த வாங்க மாட்டான்...

மத்தவங்க சாப்பிடுறதையே,
உத்துப் பார்ப்பான்...

யாராவது தனியா நின்னா...
அவங்க கிட்ட பேச்சுக்கொடுப்பான்...

என்னமோ ரொம்ப நாள்,
பழகுன மாதிரி...

அவங்க
பயந்து விலகிச்சென்றபின் கூட...

அதே இடத்தில் நின்று...
அவங்க இருக்கிறதா நினைச்சி...
பேசிட்டே இருப்பான்...

தினமும் அந்தக்கடையில அவனுக்கு...
காலையிலும், மாலையிலும்...
ஒரு டீ இலவசம்...

புதுசா வேலைக்கு சேர்ந்த,
பையன்கிட்ட அந்தப் பொறுப்பை...
கொடுக்கிறார் முதலாளி...

பைத்தியத்துக்கு டீ கொடுக்குறத...
கவுரவ குறைச்சலா நினைச்ச,
அந்தப் பையன்...

முதலாளிகிட்ட...
நேரடியாவே சொல்லிட்டான்...

நான் இனிமே இவனுக்கு...
டீ கொடுக்க போகமாட்டேன்னு...
சொல்லிமுடிச்சி திரும்பிப்பார்க்க...

ஈன்னு சிரிச்சபடியே அவன்
நிற்க...

தன் சட்டைப்பையில் கையைவிட்டு...
எதையே தேடியபடி...
ஒரு கிழிந்த காகிதத்தை எடுத்து...

முதலாளியிடம்...

இதுல...
பத்து ரூபாய் இருக்கு...
ஏழு ரூபாய் டீக்கு...
மூணு ரூபாய் இவனுக்கு டிப்ஸ்ன்னு,

சொல்லிவிட்டு...
சிரித்த முகத்துடன்...
கடையை விட்டு வெளியேறுகிறான்...

அந்த ஊரறிந்த பைத்தியம்...

இப்ப புரியுதா நான் ஏன்...
அவனுக்கு தினமும் டீ தாரேன்னு...

என்றவாறே...
அந்த கிழிந்த காகிதத்தில்...
கொஞ்சம் கிழித்து...

இந்தாப்பா உன் டிப்ஸ்...
என்று கொடுத்தார்...
அந்த முதலாளி...


இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (1-Dec-15, 9:36 pm)
பார்வை : 508

மேலே