உன் வருகையை எதிர்பார்த்து நான் - மழை
எத்தனை முறை வந்தாலும்
உன்னை வரவேற்க
நான் என் வீட்டின்
வாயிலில் நிற்பேன்!
ஏனெனில்
உன் வருகை
என்னை மெய் சிலிர்க்க
வைக்கிறது !!
ஏனெனில்
எப்போதாவதுதானே
எங்களை மகிழ்விக்க
வருகிறாய் !!
ஏனெனில்
நீயின்றி எமக்கு
உணவேது?
ஏனெனில்
உயிராகிய
ரத்தத்தில் நீராக
கலந்து என் உடலோடு
ஒன்றி விடுகிறாய் ?
ஏனெனில்
நீ இவ்வுலகில்
நீராக இருப்பதாலேயே
நான் இந் நில
உலகில் வாழும்
தகுதியைப்
பெற்றேன் !!
ஏனெனில்
உன்னாலே நான்
அழகாக தூய்மையாக
இருக்கிறேன் !!
ஏனெனில்
நீயே நான் சுவாசிக்க
காற்றைத் தரும்
மரங்களை முளைப்பிக்க
செய்கிறாய்!!
ஏனெனில்
உன்னாலே பறவைகளும்
விலங்குகளும் இன்ன பிற
உயிர்களும் உயிர்
வாழ்கின்றன!!
எனவே,
உன்னை வரவேற்க
நான் என் வீட்டின்
வாயிலில் நிற்பேன்!!
உன்னோடு விளையாட!!!
உன் துளிகளால்
நான் ஆனந்திக்க !!!
உன்னால் வரும் விடுமுறை
இனிதே கழித்து மகிழ !!!
உன் வருகையை காண
நான் என் வீட்டின்
வாயிலில் நிற்பேன்!!!