இளமையைக் காப்பாற்ற
இளமையைக் காப்பாற்ற... இப்படியா?
---------
என் தோழிக்கு, தன் அழகைப் பற்றியும், உடல்வாகு பற்றியும் பெருமை அதிகம். முப்பது வயதிலும் ரொம்ப இளமையாக இருப்பாள். திடீரென்று,"ஜிம்'மில் சேர்ந்து, தினமும், போய் வர துவங்கினாள். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை வகுப்பு. அவளுடைய, ஐந்து வயதுக் குழந்தை எட்டு மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும். வெறும், அரை மணி நேரத்தில் வெந்தும், வேகாததுமாய் கொடுத்து அனுப்பி விடுவாள். கணவரின் நிலைமையும் அதுவே.
ஒரே மாதத்தில், என் தோழியின் உடல் இளைத்ததோ இல்லையோ, அவள் மகளும், கணவரும் உடல் இளைத்து, துரும்பாகி, நோயாளிகளைப் போல் ஆகி விட்டனர். அவளுக்கு புத்திமதி சொன்னால், "என் இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா...' என்கிறாள். இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, குடும்பத்தை நட்டாற்றில் விட வேண்டுமா?
நன்றி - வாரமலர் — ஸ்ரீவித்யா, திருப்பூர்.