முறுக்கு வளையம் வாங்கித்தாங்க மாமா

மாமா எனக்கு நாலு பவுன்ல ஒரு முறுக்கு வளையம் வாங்கித் தாங்க மாமா?


முறுக்கு வளையமா? அது எப்பிடி இருக்கும்?


மாமா நா இந்தி தொலைக் காட்சி தொடர்களைப் பாக்கறேன். அதுல வர்ற இளம் மனைவிங்கேல்லாம் முறுக்கு அளவு (சைஸ்) வளையத்தை மூக்கிலெ மாட்டிட்டு இருக்காங்க. அது மாதிரி எனக்கும் ஒண்ணு வாங்கித் தாங்க மாமா.


அடியே செல்லப் பொண்டாட்டி. முறுக்கு அளவு வளையத்தை மூக்கிலெ மாட்டிட்டு இருந்தா செட்டி நாட்டு ஆச்சிங்க காது தொங்கற மாதிரி உன்னோட ஒரு பக்க மூக்கு தொங்கிப் போயிடுமே பரவாயில்லையா?


அய்யய்யோ ... அப்ப எனக்கு அந்த முறுக்கு வளையம் வேண்டவே வேண்டாம் மாமா.

எழுதியவர் : மலர் (2-Dec-15, 9:18 pm)
பார்வை : 111

மேலே