மனம் குளிர்வாய் மாரியே

பல்லாயிரம் வயிற்றின் பசி தீர்த்த நீ ,
பத்தாயிரம் பாமரர்களை பட்டினி போடுவதா?

உன்னால் எங்கும் தண்ணீர், ஆனால் எங்கே குடிக்கத்தண்ணீர்?

உனது வீட்டை நாங்கள் பட்டா போட்டது பேராசை எனும் ,
நீ மக்களை நடுத்தெருவில் நிறுத்துவது நியாயமா?

பயிர்களை வாழ வைப்பவன் நீ ,
உன்னால் உயிர்கள் மாண்டது போதும்.

அலுவலகத்தில் என் தோழி,
வீட்டில் ஆவலோடு காத்திருக்கும் அவள் மகனின் நினைவுகளில்.

அதே அலுவலகத்தில் என் தோழன்,
வீட்டில் விடாமல் கூப்பிடும் அவன் அம்மாவின் நினைவுகளில்.

நேரத்தோடு வரவில்லை இவள் கணவன்.
நேரமாகியும் கூப்பிடப் போக வழி இல்லாமல் அவள் கணவன்.

மின்சாரம் இல்லை,
மிதிவண்டி இல்லை.
உன்னிடம் கருணையுமா இல்லை?

உக்கிரத்தில் நீ இருக்க,
உதவிய ஒவ்வொரு உள்ளமும் உன்னதம்.

மனம் குளிர்வாய் மாரியே!

-விஜி.S

எழுதியவர் : விஜி.S (2-Dec-15, 9:25 pm)
பார்வை : 94

மேலே