விட்டுவிடு மாமழையே இப்படிக்கு தமிழ்மக்கள்

ஏன்
இந்த கோபம்...
என்
மக்களும் பாவம்...
உன்
உறைவிடம்
தெரியாமல்...!
உன்
வழித்தடம்
அறியாமல்...!
உன்னில்
எங்கள் இருப்பிடம்
அமைத்துவிட்டோம்...!
எம்மக்கள்
புரியாமல்
செய்த தவறிக்கு
இப்பொழுது வருந்துகிறோம்...!
சிலர்
உயிரை
எடுத்துவிட்டாய்...!
பலர்
வயிற்றை
காயவிட்டாய்...!
தண்டனைகள்
இதுபோதும் விட்டுவிடு...!
இயற்கையை
இதற்கு
மேல் எதிர்கொள்ள
ஏழை
எங்கள் உடம்பில்
பறக்கும் சக்தி இல்லை...!
இதற்கு
மேல் தாங்காது
இந்த மனித பூமி...!
இனிவரும்
காலங்களில்
இப்படியோர் மறுதவறு
நடக்காமல் இருந்திடுவோம்...!
இதற்கு மேல்
மன்னிப்பு
கேட்கத்தெரியவில்லை...!
மரணம்
மட்டுமே மீதம் உண்டு...!
போதும்
தமிழ்நாட்டைவிட்டு விழகிவிடு...!
....மாமழையே...
இப்படிக்கு
தமிழ்மக்கள்
இவன்
..பிரகாஷ்..