நகர்வுறா நகர்ப்புறம்

வேகமாய் நகர்ந்த நேரம்
மெல்லிடைத் தென்றல்
மேதாவி இருட்டு
மூன்றாம் குழந்தை நிலவு
முனகி எடுத்த வாந்தியாய்
மூடி மறைத்த நட்சத்திரங்கள்
சிணுங்கலில் சிந்திய மழைத்தூறல்
அடர்ந்த மின்னொளி
அலையென மகிழுந்துகள்
சிலைகளாய் நங்கைகள்
சிறைப்படுத்த வண்டுகள்
சில்லறைக் கடைகள்
சிகரெட்டின் நெடிகள்
ஒரு பேருந்திற்கு காத்திருப்பு
பெரியதொரு வெளிச்சுவாசத்தோடு
அகன்று முழிக்கிறது
அந்த தரிப்பிடம்
நடுக்கத்தோடு கடிகாரமுள்
நள்ளிரவை நகர விடுகிறது. ...