நீங்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா
‘செய் அல்லது செத்து மடி’ என்னும் அளவிற்கு நம் தலைக்கு மேல் பிரச்சனைகள் உட்கார்ந்திருக்கும் சூழல்களை நாம் எதிர்கொள்ளாத நாட்கள் இருப்பதில்லை.
ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது நாம் செய்யக் கூடிய விஷம் அதை சமாளிப்பதோ அல்லது அந்த இடத்தை விட்டு நழுவி ஓடி விடுவதோ தான். வேகமான வாழ்க்கை முறைகளால் நாம் அனைவரும் மன அழுத்தத்தை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் பிரச்சனைகள் நம்மைவிட்டு போவதில்லை. இவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
இதை சிலர் மறைத்து வாழ்கின்றனர். மற்றும் சிலர் அதை மேற்கொண்டு அதிலும் ஆக்கப்பூர்வமாக வாழ முற்படுவர். இதுப்போன்று வேறு: மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!! ‘மற்றவர்களிடம் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்’ என்று
நீங்கள் பதில் அளிக்கும் போது உங்களின் மன அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்ளுங்கள். அதற்கான காரணங்களையும் அறிய முற்படுங்கள். மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும் முன் இதற்கான முயற்சிகளை செய்வது சிறந்தது.
அந்த வகையில் உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா, இல்லையா என்பதை அறிய கீழ்கண்ட 10 அறிகுறிகளை கவனிக்கலாம்! எடை அதிகரித்தல் ஆம்! அதிகமாக எடையை ஏற்றிக்கொள்வது உங்களுக்கு பிடிக்காது தான்.
அப்படி என்றால் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ முயற்சியுங்கள். அதிக அளவு மன அழுத்தம் தேவைக்கு அதிகமான கொழுப்பை உடம்பில் சேர வைக்கிறது. நீங்கள் ஒல்லியாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும். மற்றும் பலர் மிகுந்த மன அழுத்தத்தின் போது அதிகம் சாப்பிட தூண்டப்படுவார்கள்.
இதனால் அதிக கலோரிகள் உடலில் சேருகிறது. தசை பிடிப்பு மன அழுத்தத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் உங்களது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதனால் இதய துடிப்பு அதிகரித்து தசைகளை இறுகி விடுகின்றன. அது மட்டுமில்லாமல் வேலையில் அதிக பதற்றம் இருந்தாலும் மன அழுத்தத்தினால் தசைகளின் வலி மேலும் அதிகரிக்கும். வயிற்று வலி வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வதும், மிகுந்த உற்சாகம் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவைகளும் மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகளாகும். வயிற்றுக்கும் மூளைக்கும் நிறைய சம்மந்தம் உள்ளது என்று ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
ஹார்வார்ட் மருத்துவ பள்ளியின் அறிக்கையின் படி காஸ்டிரோ-இன்டஸ்டைன் தொடர்புடைய பிரச்சனைகளான மலச் சிக்கல், வயிற்று எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவை மன அழுத்தத்தினால் மேலும் அதிகரிக்க கூடும். முடி உதிர்தல் நெடுங்காலமாக இருக்கும் மன அழுத்தம் ஆன்டிரோஜின்களை அதிகமாக சுரக்கச் செய்கின்றது.
இவை சுரப்பிகளின் முடி வேர்களில் தலையிட்டு தற்காலிக முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. இவை 3-6 மாதங்களுக்கு நீடிக்கலாம். நல்ல உணவு முறைகளை மேற்கொண்டு ஓய்வு எடுத்து இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கலாம். மறதி தினமும் செய்ய வேண்டிய வேலைகளில் நம் நினைவுப் பேழையிலிருந்து தவறும் போது மன அழுத்தம் அங்கே உள்ளது என்பதை உணரலாம்.
இத்தகைய மன உளைச்சலில், மிகுந்த அழுத்தத்துடன் இருக்கும் போது கார்டிசால் என்ற ஹார்மோன்கள் அதிகளவு வெளியாகின்றன. மூளையின் பின்புறத்தில் உள்ள மேட்டுப் பகுதி ஹிப்போகாம்பஸ் நினைவாற்றலை கட்டுப்படுத்தும் பாகமாகும். மன அழுத்தம் ஏற்படும் போது சுரக்கும் ஹார்மோன் இந்த பகுதியின் செயல்பாட்டை மங்கச் செய்கின்றது. இதனால் மூளையின் நினைவுகள் பாதிக்கப் படுகின்றன.
மன அழுத்தத்தின் காரணத்தை அறிந்து அதை சரி செய்தால் உங்களது நினைவுகள் திரும்ப கிடைக்கும். மூளையை எப்படி நிதானத்திற்கு கொண்டு வருவது என்பதை குறித்து நன்கு படித்து அறிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் கோளாறுகள் பெண்களுக்கு வரும் மன அழுத்தம் ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
முக்கியமாக பிட்யூட்டரி சுரப்பியை கட்டுப்படுத்தி அதன் மூலம் கருப்பை, அட்ரீனல் மற்றும் தைராய்ட் சுரப்பிகளை இந்த ஹார்மோன்கள் சரியாக வேலை செய்ய விடுவதில்லை. இதனால் பெண்களின் வழக்கமான மாத விடாய் காலம் மாறுபடவும் அல்லது இது தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கண் இமை துடித்தல் கண் இமை வேகமாக துடித்தால் அதை மன அழுத்தத்தின் ஒரு அறிகுறி என்று சொல்லலாம்.
இதற்கான உண்மையான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. அடுத்த முறை இப்படி ஆகும் போது கண்களை மூடி மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் தவிர்த்து, ஒருமுறை ஆழ்ந்து மூச்சை இழுத்து ஓய்வெடுங்கள். இதை சில முறைகள் செய்தால் கண் இமை துடிப்பது தானாக நின்று விடும். இதை செய்யும் போது நல்ல நிதானமும் கிடைக்கும். பருக்கள் நீடித்த காலமாக இருக்கும் மன அழுத்தம் நமது உடலை முழுதும் பாதிக்கின்றது.
உங்கள் சருமமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிக அளவு ஆன்டிரோஜன்கள் சுரக்கும் போது இத்தகைய சருமக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் உடல் சீராகும் நேரமும் இதனால் அதிகரிக்கிறது. இது நீங்கள் நல்ல ஓய்வெடுக்கும் போது தான் பருக்களும் நீங்க வாய்ப்புகள் கிட்டும். இவ்வாறு பருக்கள் வருவதற்கான காரணங்கள் குறித்து நாங்கள் தயாரரித்துள்ள மெகா கைடை பார்த்து, அதற்கான சிகிச்கைள், மருந்தகள் மற்றும் வீட்டிலேயே நிவாரணம் பெறும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.