பாசப்பாறை

அன்னை மண்ணில்
அகழ்ந்தெடுக்கப்பட்டு
அன்னியக் குழியில்
புதைக்கப்பட்ட
புற்று இது .....
நேற்றைய
தழுவல்கள் கடந்து
இன்றைய பொழுதுகள் விகல்பமாகவே
முட்டுக்கட்டை இல்லாத
முதிர்வாழை போல
தட்டத்தனியே
தாங்கிக்கொள் என்று
அடர் வாதம் புரிந்தது
- பிரியத்தமிழ் -