மழையின் பதிப்பு

மனித உடலின்
அனைத்து பாகத்தையும்
குளிர்வித்த மழை
வயிற்றை மட்டும் எரியவைத்தது
பெருவெள்ளத்தால் ..

இந்த மழை
சிறு துளி பெருவெள்ளமாகும்
என்பதை எடுத்துக்காட்டியது

ரோட்டில் கூட
போட்டை ஓட்டிக்காட்டியது

ஏழைகளை எலிகாப்டர்
ஏற வைத்தது

உணவுதனை தூக்கிப்போட்டு
மட்டைப்பந்து விளையாடியது

இந்த மழை
ஏழை பணக்காரனை
ஒரே இடத்தில ஒதுங்க வைத்தது

பெட்ரோல் நிர்ணயித்த விலைவாசியை
தண்ணீர் மலைபோல் உயர்த்தியது

இந்த மழை
அஸ்திவாரங்களோடு சேர்த்து
அரசியல்வாதிகளையும்
ஆட்டிப்பார்தது

கடலூரை
கடல் ஊர் ஆக்கியது

மக்களின் கண்களை
மேகமாக்கியது
கர்பிணிப் பெண்களை
சோகமாக்கியது

இது மழையின் பாதிப்பு அல்ல
மழை சொல்ல விரும்பிய பதிப்பு

எழுதியவர் : குமார் (5-Dec-15, 11:53 pm)
Tanglish : mazhaiyin pathippu
பார்வை : 314

மேலே