ஏ மழையே
ஏ மழையே
ஏரிக்குள் உறங்கியது
போதுமென்றா
சேரிக்குள் உறங்கவந்தாய் ?
அணைக்குள் அடங்கியது
போதுமென்றா
சென்னைக்குள் அடங்கவந்தாய் ?
நங்கள் வெல்லம் உண்டது
போதுமென்றா எங்களை
வெள்ளம் உண்ணவைத்தாய் ?
ஏ மழையே
புனித கடல்தேடி ஓடியது
போதுமென்றா நீ
மனித உடல் தேடி ஓடிவந்தாய் ?
உன் மீது கப்பல்
ஓட்டியதற்கா எங்களை
கப்பம் கட்டவைத்தாய் ?
கொடைமகன் கர்ணன்
இலவசமாய் கொடுத்தான்என்றா
அடைமழை வருணனை
இரவில் அடித்துச்செல்ல வைத்துவிட்டாய் ?
ஏ மழையே
மனைப்பிரிவில்
பெருநகரம் வரும்
பேருந்து வரும் என்றதற்கா
பேரிழப்பை வரவைத்தாய் ?
வேளச்சேரியை
வெள்ளச்செரி என
பெயர் மாற்றம் செய்யவோ
வேலை விட்டு ஓடி வந்தாய் ?
அடையாறை
அடைமழை கொண்டு
அடை ஆறாய்
மாற்ற வந்தாயோ ?
மழையே
செம்பரம்பாக்கம் ஏரியை
செம்மையாக்கினாய்
அச்சரப்பாக்கத்தை ஏன்
அச்சுறுத்தினாய் ?
வருணனின் வருகை
வருமானத்தைக் கெடுத்தது
வருத்தத்தைக் கொடுத்தது
கருணையில்லாப் பலரில்
வாருணனும் ஒருவன்
சிங்காரச் சென்னையில்
கைநழுவி சிந்திவிட்டான் தண்ணீரை
மக்களை சிந்தவிட்டான் கண்ணீரை
தண்ணீர் செய்யவிருந்த காவை
தடுத்ததோ
தன்னார்வலர்களின் சேவை
தன்னார்வலர்களின் பணிகண்டு
தண்ணீரும் தனிந்துகொண்டிருக்கின்றது
வாழ்க அவர்கள் பணி
நீர் வடிய கட்டமைப்பை
ஏற்படுத்துவோம் இனி