இதய உணர்வு நெஞ்சில் 555
நட்பு...
இதய உணர்வுகளோடு
மெதுவாய் உறவாடி...
தென்றல் அலைகளிலே
தவழ்ந்து அருகமர்ந்து...
மலரிதழ்களின் மயக்கத்தில்
உருவாகி...
பாடிபறக்கும் வண்டுனத்தை
பக்கத்தில் கவர்ந்திழுத்து...
பூங்காவனத்தின் சுகந்தம்
பூச்சிறப்பின் மகிமை...
விலையே வேதமெனும் உலகில்
விலையில்லா உணர்வளித்து...
சோக நெஞ்சங்களை
சொந்தமாக வயபடுத்தி...
காலங்காலமாய் பூவுலகில்
கண்டதோர் இன்பம்...
நட்பு என்னும் இன்பம்...
உலகை வெல்லும் இன்பம்.....