அன்றும் இன்றும்
அன்று.......
கண்கள் மொழி பேசி..
கவிதை பல எழுதி..
பேச்சு மூர்ச்சையாகி..
அவன் சிரிப்பே சிந்தனையாகி..
தூரம் சென்ற காதலை அழைக்க
தூது அனுப்பிய மேகம் வரும் முன்னே
காதல் வாழ்ந்தது.. கண்ணீரோடு..
இன்று.......
இணையத்தில் முகம் பார்த்து..
தட்டச்சே கையெழுத்தாகி..
அலைபேசியில் அவன் குரல்கேட்டு..
தனிச்சிந்தனைக்கு நேரம் இன்றி..
அழைப்பு மணி ஒலிக்கும் முன்னே
அவன் குறுஞ்செய்தி வந்திருக்க
என் கண்ணனவனை நினைக்கும் போதெல்லாம்
காதல் வாழ்கிறது.. இணையத்தோடு..