இருந்தால் சொல்லுங்களேன்
இருந்தால் சொல்லுங்களேன்.
கன்னியர்கள்
காதுகளில்…….
காற்றின் துணையோடு…
ஆடி….ஆடி அழைக்கின்ற
தொங்கட்டான்களில்
தொலையாதவர்
இருந்தால் சொல்லுங்களேன்!
தளிர்மேனி தாவணியில்
தழுவுகின்ற தென்றலோடு…
நழுவுகின்ற வாசத்திலே
தடுமாறாதவர்…..
இருந்தால் சொல்லுங்களேன்!
மையல் விழிகளிலே..
மைபூசி…..பொய்யெழுதி
போனாலும்…….
மெய்யுருகாதார்…..
இருந்தால் சொல்லுங்களேன்!
விசுவாமித்திரரே!
வீழ்ந்த வரலாற்றில்..
வளையோசைகளுக்கு
வணங்காதவர்
இருந்தால் சொல்லுங்களேன்!
--- கே. அசோகன்.