சொல்சொல்சொல்
பொழுதுவிடிந்து கண்உறங்கிடலாமோ சொல்சொல்சொல்- நாம்
பொன்பொருள் விரும்பிபொய் சொல்லலாமோ சொல்சொல்சொல்
கடமையைக்காலம் தாழ்த்துதல்சரியா சொல்சொல்சொல் - அந்த
காலம் உனக்கென காத்திருக்குமா சொல்சொல்சொல்
முன்னோர் செல்வத்தில் வாழ்வதுமுறையா சொல்சொல்சொல்- நீ
முன்னேற உலகில் வழிகளில்லையா சொல்சொல்சொல்
கதிர்வரும் நேரம்மதி உதித்திடுமா சொல்சொல்சொல் - வெண்
மதிவரும் நேரம்கதிரும் தோன்றுமா சொல்சொல்சொல்
காற்றின் அலைகள் கண்களறியுமா சொல்சொல்சொல் - அந்த
காற்றில்லை என்றால்எதுவும் நடக்குமா சொல்சொல்சொல்
பாவத்தின் செல்வம் நிம்மதிதருமா சொல்சொல்சொல் - கடும்
பாலைவனத்திலே பயிரும் விளையுமா சொல்சொல்சொல்
கொடுக்கின்ற மனிதர்க்குபெருமை குறையுமா சொல்சொல்சொல்-பிறரை
கெடுக்கும் பேர்களின்வாழ்க்கை உயருமா சொல்சொல்சொல்
எளியவர் தம்மை இகழ்ந்திடலாமா சொல்சொல்சொல் -உன்னை
ஏற்றிவிட்டவரை எட்டி உதைப்பதா சொல்சொல்சொல்
விழிகளுக் கிமைகள் சுமைகளாகுமா சொல்சொல்சொல் - நம்
விரலுக்கு நகமே பாரமாகுமா சொல்சொல்சொல்
சுற்றித்திரிபவர் வாழ்க்கை உயருமா சொல்சொல்சொல் - நீ
சிக்கனம்மறந்தால் வாழ்க்கை சிறக்குமா சொல்சொல்சொல்
ஊக்கம்உடையோர்க்கு ஆக்கம் குறையுமா சொல்சொல்சொல்-பிறர்க்கு
உதவிசெய்வோரை தடுப்பது தகுமா சொல்சொல்சொல்
அறிவினும் உயர்ந்தசெல்வமும் உண்டோ சொல்சொல்சொல் -உன்
ஆசையைக் குறைத்தால் துன்பம்தொடருமோ சொல்சொல்சொல்
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்