காதல்
ஆனந்தமா உயிர்படும் அல்லலா
இதயத்திருடலா இதயத்தொலைப்பா
உணர்வா உயிரைப்பருகும் உணர்ச்சியா
காதல் எனறால்தான் என்ன?
பூவையரில் பலரைப் பார்க்கும்போது
பேசத் தோன்றுகிறது அவர்கள் அழகால்!
சிலரைப் பார்க்கும்போது
மதிக்கத் தோன்றுகிறது அவர்கள் செயலால்!
வெகுசிலரைப் பார்க்கும்போது
வணங்க தோன்றுகிறது அவர்கள் பண்பால்!
ஆனால்பார்! யுவதியுனை நினைக்கும்போதே
பேசி, மதித்து, வணங்கி
உடன் வாழவும் தோணுதே!
அட!! இதுதான் காதல் என்பதோ!!