செருக்கோ
"""""""""""""""""
என்ன
இந்த பூவிற்கு
இத்தனை இறுமாப்பு. .....
அண்ணன்களோடு
அவதரித்த செருக்கோ.......
வண்ணங்களோடு
மலர்ந்த மிடுக்கோ...........
என்ன
இது அவனுக்கு
இன்னுமோர் அம்மா
என்ற விருப்போ.......
பாலக நெஞ்சில்
தூங்கிடாது நிதம்
தாங்கிடத் தவிப்போ. .......
- பிரியத்தமிழ் -