தேசுடை நாடானதே --- முன்முடுகு வெண்பா

காடான வாடாத தானாக ஆளாத
நாடான வாழாத ஓடாத -- நானாக
வீசுறும் வாழ்விற்கு விந்தைகள் செய்திடின்
தேசுடை நாடான தே.


பொருள் :-

வாடாத காடுகள் பலவும் உள்ளதே நம் பாரதநாடு . முடியாட்சி விடுத்து தானாக ஆளாது மக்களால் மக்களுக்காக ஆளும் அரசு நம்மரசு . இப்படிப்பட்ட உலகில் சிறந்த பற்பல வளங்கள் நிறைந்த நம் நாட்டில் வாழாது அந்நிய நாட்டைத் தேடி ஓடுதல் கூடாது . அத்தகைய மனிதன் நான் இல்லை . நல்வாழ்வு பெற நாமும் பாடுபட்டு பல விந்தைகள் செய்திட்டால் நம் நாடும் மற்றைய நாட்டிற்கு நிகரானதே . அது நம் கையில் தான் உள்ளது .

பொருள் :-

தாதான --- சந்தம் முதல் இரண்டு அடிகளுக்கு மட்டும்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Dec-15, 12:26 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 57

மேலே