வேரோடி நின்ற
வெட்டி வெட்டி
முழிக்கும்
எட்டு நாள் சிசுவின்
விழிகளைப் போல
அவள் வயோதிப
நெஞ்சில்
படபடப்பு. .........
ஆனாலும்
பாத்திரத்தில்
நேர்த்தியான பிரகாசம்
மார்கழி மழைக்கு
முகம் காட்டும்
தம்பளப் பூச்சியின்
மெருகும் மினுமினுப்பும்
அந்த தேவதையின்
மனசுக்கு. ........
செல்லமாய் சிணுங்கும்
வாடைக்காற்றாய்
சில்மிஷித்து நகர்ந்து
ஆரோகணித்துச் செல்லும்
எண்ண
அலைக்கற்றை ........
கடிவாளம் கழன்ற
நாம்பன் கன்றாய்
மூர்க்கம் காட்ட. .........
முற்றத்து அறுகம்புல்
முளைகட்டி முளைகட்டி
குருத்திலே
கருகுவது போல்
வேரோடி நின்று
சாகாது துடித்து
நிற்கும் வாழைக்கிழங்கு. .......
- பிரியத்தமிழ் -