நீயும் நானும் அமர்ந்த அந்த கடற்கரையோரம்
நீயும் நானும் அமர்ந்த அந்த கடற்கரையோரம்….
பெற்றதும், பெறப்போவதும் யாதெனில் காதலே….
மணலில் பாதங்கள் புதைந்து நாம் நடந்த போது…
மனங்களும் புதைந்தது நட்பில், நாட்கள் நகர்ந்த போது….
எனக்கு பிடித்ததோ வானத்தின் நீலம், உனக்கோ கடலின்,
என்று நட்புடன் ஆரம்பித்து,
உனக்கு ஆண் என்றால், எனக்கு பெண் குழந்தை…
என்று தானே முடித்தோம்!
முன்பெல்லாம் அந்த உட்காரும் பலகை மிக பெரிதாக தோன்றும்…
அப்புறம் ஏன் சின்னதாகி கொண்டே போனது? இடைவெளி அதிகமானதாலோ?
தொடங்கிய இடத்திலே முடிந்த நமது காதல்…
பெற்றதும், இழந்ததும் காதலை மட்டுமே…
VTV STYLE….. (பாட்டெல்லாம் கிடையாது)
நட்பை அல்ல…
நினைத்த போதெல்லாம் ஒரு குறுஞ்செய்தியில் நாம் அருகில் இருப்போமே கண்மணியே (தோழியே)…
ஆனால் நட்பு நிமித்தமாக நாம் இன்று சந்திக்கிறோம் மின்னஞ்சல் அனுப்பி…
மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியவில்லையே செல்லிடப்பேசி எண் போல….
பரிமாறி கொள்ள இருவரிடமும் வார்த்தைகள் இல்லை…
தத்தம் கல்யாண பத்திரிக்கைகள் மட்டுமே….
வாழ்க வளமுடன்