காட்சிப்படுத்தாத இந்தியா 1 - மகிழினி

"Agar firdaus bar ru-ye zamin ast,
Hamin ast o hamin ast o hamin ast "

ம்ம்ம் இந்த வார்த்தைகளுக்கு என்ன வர்ணம் தீட்டுவது?. என்ன வர்ணனை தருவது? முதலில் இந்த வரிகளைப்பற்றி கூறிவிடுகிறேன்..

பாரசீக பெருமைகளை தன்னகத்தே கொண்ட மாபெரும் பெர்சிய கவிஞன் அமீர் குஷ்ரொவ் அவர்களின் உருது கவிதை இது. இவர் இந்திய பாகிஸ்தானிய இஸ்லாமிய குவல்லி (Qawalli) இசை உலகின் தந்தை என்ற போற்றுதலைப் பெற்றவர். கஜல் கவிதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமையையும் இவரைத்தான் சாரும்.

வர்ணனைக்காக ஏங்கி நிற்கும் அந்த உருது வரிகள் நம் தாய்திருநாட்டின் கிரீடத்தில் இடம்பெற்று ஜொலித்திருந்த காஷ்மீர் பற்றியதாகும்.

இந்த உலகில் சொர்க்கம் என்ற ஒன்று இருக்குமானால்
அது இங்கு தான் .. அது இங்கு தான்.. அது இங்கு தான்..

காஷ்மீர் இந்திய கிரீடத்தின் கோஹினூர் என்றாலும் தகும் தான். அது நமக்கான சொர்க்கம் என்றாலும் அது மிகையல்லாதவை தான். காஷ்மீர் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அழகை, அழகான வரலாற்றை, அழகான வரலாற்றின் கதைகளை தனக்குள் பத்திரப்படுத்தி அழகு காண்கிறது.

யாவருக்கும் தெரிந்ததே இந்தியாவின் ஒரே இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட மாநிலம் ஜம்மு & காஷ்மீர் தான். அதே காஷ்மீர் தன் மடியில் புத்த மதத்தையும் இந்து மதத்தையும் சீராட்டி பாலுட்டி வளர்த்தாள். இரண்டாவது உலக புத்த மாநாடு நடந்தது இதே மண்ணில் தான். புத்தம் உலகெங்கும் பரவுவதற்கான தளத்தை ஏற்படுத்தியதும் இதே மண் தான். சமயங்களுக்கு அப்பாற்பட்ட இந்த மண்ணை ஹிந்து அரசர்கள், சீக்கிய அரசர்கள், இஸ்லாமிய அரசர்கள் என ஆட்சி செய்து சிறப்பித்தார்கள்.

இன்று நாம் பார்வையில்படும் ஒரு காஷ்மீர் சகோதரன் காஷ்மீரி மட்டும் அல்ல. அவன் பாரம்பரியம் நீண்டதொரு அழகியலைக்கொண்டிருக்கிறது.நான்கு காலநிலைகளையும் கண்ணில் கண்டு குளிரை தன் இயற்கையின் கலாச்சாரமாக கொண்டிருக்கிறான். அவனின் கலாச்சாரம் வெறும் முகமதிய கலாச்சாரத்திற்குள் அடங்கிவிடுவது கிடையாது. எல்லைகள் அற்ற விசாலமான அறிவினை இயற்கையின் மூலம் அவன் பெற்றிருக்கிறான்..

அவர்களின் நம்பிக்கைகளில் ஒன்று கீழ் வானில் சூரியன் மறையும் பொழுது செவ்வானமாய் காட்சியளித்தால், அன்று.........????

தொடரும்

நன்றிகளுடன்
மகிழினி

எழுதியவர் : நித்யா (9-Dec-15, 7:47 pm)
பார்வை : 800

மேலே