என் ஜென்மம் ஈடேறும்,,,

நீ இன்றி வாழும்
நிமிடங்கள் யாவும்;
ஒரு வரி தொலைத்த
திருக்குறளாய்!

மதி முகம் காணா
மனம் இன்று இங்கே
மணமிழந்து வாடும்
மல்லிகையாய்!

அழகான உலகம்
அதில் நீயும் நானும்..
அழியாத காதல்
அருகே நீயும் நானும்..
அடங்காத ஆசை
அணைப்பில் நீயும் நானும்..

கனவுகள் சொல்லும்
ஆயிரம் கதைகளோடு,
கற்பனையில் வாழ்கிறேன்
மனம் கொண்டவன் உன்னோடு..

என் தலையணை அறியும்
தினம் நான் வழங்கும்
முத்தங்களின் மொத்தம்,
உனை எண்ணி அதற்கும்..

உன் நிழற்படம் அதனோடு
நிறுத்தாமல் கூறிடும்
மனச் சுமைகள் எல்லாம்,
உயிர் சுமக்கும் நாளுள்
என்றேனும் ஒரு நொடி
கைகூடும் என்றால்,
ஈடேறும் அந்நாள்...,
என் ஜென்மம் உன்னால்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (9-Dec-15, 10:40 pm)
பார்வை : 507

மேலே