வள்ளுவ வாழ்த்து

உலகத்தை இரண்டடியில் உரைத்தவனே உத்தமனே
மூலறிந்த நாயகனே போற்றி - செந்
தமிழுக்குத் தனிச்சிறப்பை தந்தவனே தவத்தவனே
அமுதவனே அருந்தவனே போற்றி

தரணியிலே யாவருக்கும் சமத்துவத்தை போதித்த
பரணியே பாவலனே போற்றி - மனித
வாழ்விற்கு இலக்கணத்தை வகுத்திட்ட வாலறிவா
ஏழ்மைக்கும் ஏடளித்தாய் போற்றி

குறள்வெண்பா கொடையீந்த குறைவில்லா அறிவீந்த
பரல்வெண்பா சிம்பொனியே போற்றி - கண்
காணயேங்கும் கருத்தவனே காரீந்த கருணையனே
அண்டவனே அதிபரனே போற்றி

பிறப்பொக்கும் எனமுழங்கி சாதிமத இழிவிழுங்கி
முற்போக்கில் மூத்தவனே போற்றி - முக்காலம்
கணித்தவனே எழுசீரில் உயர்ந்தவனேத் தமிழ்
முனியே மூப்பனே போற்றி போற்றி...!


-------------------நிலாசூரியன். தச்சூர்

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (11-Dec-15, 3:53 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 1354

மேலே