மீட்சிகள் நீட்சிகளாகவே கிடக்கின்றன
அடைமழை விட்டுவிட்டது
இன்னும்
அரசியல் மழைதான் விடவில்லை
தண்ணீர் வடிந்துவிட்டது
கண்ணீர் வடியவில்லை
கண், காது, மூக்கு முளைத்தும்
ஏனோ
உருவமற்று கிடக்கின்றது
நிவாரண நிதி
ஆட்சிகளும் காட்சிகளும்
அப்பப்போ மாறினாலும்
மீட்சிகள் என்பது
இன்னும்
நீட்சிகளாகவேதான் இருக்கின்றன
இதோ....
வழக்கம்போல்
இடிந்த வீட்டில்
எதிர்காலத்தை
தேடிக்கொண்டு இருக்கிறார்கள்
ஏழைகள்...!
--------------------நிலாசூரியன். தச்சூர்