நெருப்பின் ஞாபகம்
நெருப்பின் ஞாபகம்
-----------------------------
ஒரு மீசை
ஒரு முண்டாசு
கழடவில்லை
எங்கள்
கண்களிலிருந்து
காற்று
வீசுவதை
நிறுத்தும் வரை
வீசும்
உன்
தமிழ் வீச்சு
உன்
பூபாலத்தால்
பூத்த புதுக்கவிதை பூ
இன்னும் வாடவில்லை
நீ வார்த்த
வார்த்தைகள்
பால் வார்த்தவை
தமிழுக்கு
நீ தெறித்த
அக்கினி குஞ்சுகள்
தமிழன் இதயங்களில்
இன்னும்
புகைந்துகொண்டு
---பாரதிக்காக
கா.காஜாமைதீன்.