காகாஜாமைதீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காகாஜாமைதீன்
இடம்:  பழனி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Dec-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  19

என் படைப்புகள்
காகாஜாமைதீன் செய்திகள்
காகாஜாமைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 6:47 pm

உரசவில்லை
ரசித்தது
கண்வண்டு

பறிக்கவில்லை
தடவிக்கொடுத்தன
விரல்கள்

பிடுங்கி எறியவில்லை
காற்று
தாலாட்டியது
மின்விசிறி

படுக்கை அறையில்
முடிசூட்டி பின்
உதிர்க்கப்படவில்லை
கசக்கப்படவில்லை
வரவேற்பறையில்
மரியாதை

சூரியன் சுடவில்லை
ஏ.சி. குளிர்கிறது

இலை உதிரவில்லை
வேருக்கு வேலையில்லை
வறட்சியிலும் குறையவில்லை
வண்ணம்

சாமிக்கு வழிபடவில்லை
சடலத்தின் வழியெங்கும்
வீசப்படவில்லை

பூக்களுக்கு
பொறாமை
காகிதப்பூவைப்பார்த்து

காகிதப்பூ
பூவின் போலி
புன்னகையின்
ஒப்பனை

பூக்காடு அழித்து
கட்டிய வீட்டிற்குள்
நினைவுச்சின்னமாய்
காகிதப்பூ

காகிதத்திற்கு குப்பைத்தொட்டி
கா

மேலும்

அனைத்தும் நிதர்சனமான பாதையில் நகரும் எழுத்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 10:28 pm
காகாஜாமைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 6:34 pm

நிலாவை யாரும்
வெறுப்பதில்லை
துாங்கவைப்பதால்
சூரியனை யாரும்
விரும்பவில்லை
எழுப்பிவிடுவதால்

--------------------

உயிருள்ள
மனித ஓவியம்
தனக்குத்தானே
தீட்டிக்கொண்டது
கறுப்பு வண்ணம்
.டை

---------------------


கரும்பு
அதிகமாக தின்ன
கூலி
எய்ட்ஸ்


-------------------------------------------


மாற்றுத்திறனாளி
------------------------------

ஒரு காலில்
நின்றாலும்
எல்லோரையும்
தன்னைத்தேடி
வரவைத்தது
மரம்

---------------------------------


பாம்புக்கு
கால்இல்லை
வௌவாலுக்கு
கண் இல்லை
முதலைக்கு
நாக்கு இல்லை
எல்லாம் இருந்தும்
இல்லை
மனிதனுக்கு

----------

மேலும்

காகாஜாமைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 6:40 pm

நிலாப் பிறையும்
நெற்கதிரும்
நின்று குனியும்
ருகூவு

ஆடு மாடு
விலங்கினங்களும்
உன்னை வணங்கி
மேய்ந்தபடி
குனிந்தன
ஸுஜுது

இருபுறம்
முகம் திருப்பி
சலாம் கூறின
சூரியகாந்தி பூக்கள்

காலை
எழுந்து
மாலையில்
மண்ணில்
தலைவைத்து
ஸஜ்தா...
தொழுகிறான்
சூரியன்

ஓங்கி உயர்ந்த
மரத்தையும்
வணங்க வைத்துவிட்டாய்
காற்றை அனுப்பி

காபாவை
தாங்கிய
பூமியும் சுற்றுகிறது
இடமிருந்து
வலமாக

கோல்கள்
உன்
கால்களை
சுற்றுகின்றன

உன் திசை பார்த்து
திரும்பியபடி
மண்ணில்
புதைகின்றன
பிணங்கள்

நிகரற்றவனே
நிலாவை பிளந்த
நபியின்
நினைவுகளை
எங்கள்
நெஞ்சத்தில்
தைப்பாயாக

இப்போதும்
உன்னைப

மேலும்

காகாஜாமைதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2015 8:39 pm

மேகம்
போர்வையானது
பூமிக்கு

பனித்துளிகள்
போர்வையானது
புல்லுக்கு

பறவைகள்
போர்வை
மரத்திற்கு

சிறகு
போர்வை
பறவைக்கு

போர்வை கிடைக்காமல்
அங்கும் இங்கும்
அழைகிறது
காற்று

மார்கழியில்
மதிப்பு அதிகம்
சூரியனுக்கு

-------------------------------கா.காஜாமைதீன்

மேலும்

அடடா அழகான கவிதைகள் 21-Dec-2015 11:27 pm
தொடரட்டும்........ 21-Dec-2015 9:22 pm
காகாஜாமைதீன் - காகாஜாமைதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2015 4:41 pm

நீா் அவதாரம்
--------------------------
நதியாக நடந்தாய்
அருவியாக குதித்தாய்
குளமாக இருந்தாய்
மழையாக விழுந்தாய்
கடலாக பரந்தாய்–அதில்
அலையாக அலைந்தாய்
சுனாமியாக சுழன்று
சுவாசங்களை நிறுத்திய
உன்
அவதாரங்கள் எத்தனை

இப்போது
ஒரு
அவதாரம்
சென்னை அவதாரம்

கறைகளை கரைக்க
உன்னிடம் வந்தவா்கள்
உன் கரைகளை கரைக்க பார்த்தால்
விடுவாயா
அவா் நகரங்களை
நகா்த்திவிட்டாய்

தாயே
நீதான் பெரியவள்
உன்னை குடித்த எல்லோரையும்
நீ
குடித்துவிட்டாய்

உன் ஆழங்களை அடைத்த ஆட்களை
மேம்பாலங்கள் மேல்
மிதக்கவிட்டாய்

உன் பாதை மறித்தவா்களின்
பாதைகளை மறைத்துவிட்டாய்

உன்னை ஆக்கிரமித்து
காணாமல் போ

மேலும்

நன்று,.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Dec-2015 12:19 am
நாளைய விடியல் நல்லதாய் அமைய பிராத்திப்போம் 03-Dec-2015 5:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே