போர்வை

மேகம்
போர்வையானது
பூமிக்கு

பனித்துளிகள்
போர்வையானது
புல்லுக்கு

பறவைகள்
போர்வை
மரத்திற்கு

சிறகு
போர்வை
பறவைக்கு

போர்வை கிடைக்காமல்
அங்கும் இங்கும்
அழைகிறது
காற்று

மார்கழியில்
மதிப்பு அதிகம்
சூரியனுக்கு

-------------------------------கா.காஜாமைதீன்

எழுதியவர் : (21-Dec-15, 8:39 pm)
Tanglish : porvai
பார்வை : 78

மேலே