சின்ன சின்ன மின்னல்கள்

நிலாவை யாரும்
வெறுப்பதில்லை
துாங்கவைப்பதால்
சூரியனை யாரும்
விரும்பவில்லை
எழுப்பிவிடுவதால்

--------------------

உயிருள்ள
மனித ஓவியம்
தனக்குத்தானே
தீட்டிக்கொண்டது
கறுப்பு வண்ணம்
.டை

---------------------


கரும்பு
அதிகமாக தின்ன
கூலி
எய்ட்ஸ்


-------------------------------------------


மாற்றுத்திறனாளி
------------------------------

ஒரு காலில்
நின்றாலும்
எல்லோரையும்
தன்னைத்தேடி
வரவைத்தது
மரம்

---------------------------------


பாம்புக்கு
கால்இல்லை
வௌவாலுக்கு
கண் இல்லை
முதலைக்கு
நாக்கு இல்லை
எல்லாம் இருந்தும்
இல்லை
மனிதனுக்கு

--------------------------------------

உயரத்தில்
இருப்பதால்தான்
என்னவோ
யாரும்
கண்டுகொள்வதில்லை
நிலாவில்
கரை.

------------------------------------------

உன் கண்
மின்னல்
வார்த்தை
இடி
என் கண்ணில்
மழை.

-----------------------------------------

கரும்புக்கு பதில்
கான்கிரிட் துாண்
மாட்டுக்கு பதில்
மாருதிகார்
வயலில்
அமோக விளைச்சல்
கட்டிடங்கள்
பிளாஸ்டிக் அரிசியில்
வைக்கப்பட்டது
பொங்கல்

----------------------------------

விழியால்
விசாரித்த பிறகு
வார்த்தையால்
வரவேற்கிறாய்
புரிகிறது
மின்னலுக்கு
பிறகுதானே
இடி.


-------------------------------------


சூரியனை
மறைத்தது
மேகம்
என் கண்ணை
மறைத்தது
உன் கூந்தல்

---------------------------------

நம் காதல்
ஜெயித்தால்
நான் உன்
கணவன்
தோற்றால்
மிகப்பெரிய
கவிஞன்

------------------------------------------------


எதிர்சொல் காண்க
---------------------------------
பெண்ணே நீ
பேசும்போது
உன் வாயின்
எதிர்ச்சொல்
உன் கண்

------------------------------------------


வெல்க தமிழ்
-----------------------
உரைநடை
மெதுவாக நடந்தால்
நாவல்
வேகமாக ஓடினால்
சிறுகதை
பின்பக்கமாக நடந்தால்
புதுக்கவிதை
தாவிக்குதித்தால்
ஹைக்கூ
நடனமாடினால்
பாடல்

----------------------------------------------

பெருங்கவிதை
---------------------------
நிறைய வரிகளை
பார்த்தால்
விழுகிறது
நெற்றி வரிகள்

-------கா.காஜாமைதீன்
பெரியகலையம்புத்துார்
பழனி.

எழுதியவர் : (27-Dec-15, 6:34 pm)
சேர்த்தது : காகாஜாமைதீன்
பார்வை : 67

மேலே