சிசு
கொல்லைப் பக்கம் அழு குழந்தை
சத்தம் கேட்டு
எட்டிப் போனேன் அங் கில்லை
சத்த மில்லை
சில வேறு காட்சி கண்டேன்
நெகிழிப்பிய்த்த காக்கை
சத்த மில்லா மொத்தமாய் புசிக்கும்
தெரு நாய்.
குஞ்சு பொறித்த பெட்டைக் கோழி
கால் கிளறி
இறை அளிக்க தம் பிள்ளைக்கு
குஞ்சு தேடிபுசிக்க
குட்டி ஈன்ற பன்றி ஒன்று
கொஞ்சிப்புரள குட்டியோடு
பார்த்தேன் நான் தாய்ப் பாசம்
உணர்ந்து மகிழ்ந்தேன்.
கணம் குழந்தை சத்தம் மீண்டொலிக்க
திசை திரும்பி
கிட்டப் போய் எட்டிப் பார்த்தேன்
குப்பைத் தொட்டி.
பச் சிளங் குழந்தை பட்டினியோ?
விடா தழுகை!
இடி யென எழுப்பி அழ
கண்ணீர் வழிய!.
கோவில் அலைந்து கொடு விரதமிருந்து
தினமேங்கும் பலர்
குழந்தை வேண்டி ,குறையைக் கலைய
மன தழுவார்
செல்வங்கள் வேண்டாம் பிள்ளை செல்வம்
போது மென
நினைந்து நினைந்து நித்த மழுவார்
ஆயிரம் ஆயிரம்!
வேறு வழி ஈன்ற இன்போல்
சிசு பல
சாலையிலே சாக் கடையிலே தினம்
வீசப் பட
இரக்க மில்லா இம் மனிதன்
சாக வேண்டும்
நல்லவர் சிலர் நாட்டில் உலவவே
இவ்வுயிரெல்லாம் பிழைக்கிறது...