தேவதை

விடையில்லா விடுகதை
அவள்..

வளர்பிறை தேய்பிறையில்லா வெண்ணிலவு
அவள் விழிகளுக்கு இடையில்,
தெளிவற்ற நிலையிலேயே
தொடங்குகிறது எனது பகல்கள்.

தேவதையின் சுவாசக்காற்று
தென்றலாய் அவள் நாசிகளில்,
ஒவ்வொரு முறை தீண்டும்போதும்
மலர்கிறது...
என் இரும்பு இதயம்.

தாமரை மலர்களில்
வேர்விட்ட கொடியாய்
அவள் உள்ளங்கை ரேகைகள்,
படராதா என்மேல் - என
எங்கும் ஆலமரமாய் நான்.

நாள்தோறும் நிறம்மாறுகிறது
அவள் நகரோஜாக்கள்,
நிஜரோஜாக்கள் தோற்குதடி
என் காதலில் தினமும்.

கார்முகிலை கட்டிவைப்பது
அவள் கூந்தலில் மட்டுமே
சாத்தியமாகிறது...

இயற்கையை மிஞ்சும்
எழில்கொஞ்சும் வளைவுகள்,
விபத்துகளால் உயிர்வாழும்
வினோதம் காதலில் மட்டுமே.

எத்தனை பெரிய தவம் செய்ததோ,
அவள் தாவணியும் காலணியும்,
கர்வத்தில் நகைக்கிறது.

அமுதம் சுரக்கிறது
அவளது இதழ்கள்,
ஒருமுறை சுவைத்துவிட்டால்
ஒருஜென்மம் வாழ்ந்துவிடுவேன்..!
அவள் தந்த நினைவுகளுடன்..!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (27-Dec-15, 9:55 pm)
Tanglish : thevathai
பார்வை : 131

மேலே