நிழற்படம்

அன்று..
காசு மட்டும் சேர்த்த நான்..
நம் நட்பையும் சேகரித்தேன்
நாம் இருந்த நிழற்படமாக..
இன்று..
தூரத்தில் நம் நட்பு
தொலைந்த பின்னும்
அது வட்டி போட்டு
கொட்டி கொடுக்கிறது..
நினைவு என்னும் சந்தோசத்தை..




குறிப்பு:
இன்பமான தருணங்களில் கட்டாயம் நிழற்படம் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பாதுகாத்தும் கொள்ளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசியில் எடுத்துவிட்டு நினைவகம் நிரம்பியதும் பின்பு அழித்துவிடாதீர்கள். ஏனெனில் பிற்காலத்தில் நீங்கள் அந்த தருணத்திற்கு மீண்டும் சென்றுவர அவை நிச்சயம் உதவும்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (11-Dec-15, 10:55 pm)
பார்வை : 237

மேலே