பீப் பாடல்

இன்று இளைஞர்கள் மத்தியில் பரவலாக பகிரப்படும் பாடல்

Beep பாடல் ..!!!!

அனிருத் இசை அமைக்க சிம்பு பாடிய பாடல் ..


இந்த பாடலில் கெட்டவார்த்தைகள் என்று சொல்லப்படும் ******
வார்த்தைகள் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அது வெளிப்படையாக கேட்காமல் இருக்க ஒரு ஒலியை வைத்து மறைதிருகிறார்கள்

இந்த பாடல் சமூக சீரழிவுக்கு எடுத்து செல்லும் மற்றும் பெண்களை பற்றி கேவலமாக பாடி இருக்கிறார்கள் ஆகவே இதை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள் திராவிட இயக்க மற்றும் நாத்திக கண்மணிகள் .

கருத்து சுகந்திரம் தனிமனித சுகந்திரம் என்று காதலர் தினத்தன்று பொது வெளிகளில் தவறு செய்யும் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போ வந்து அசிங்கம் ஆகிவிட்டது என்றால் எப்படி ???


பெருமாள் முருகன் எழுதிய நூல் பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள் என்று சொல்லிய பேர்கள் இப்போ வந்து சிம்ம்புவையும் அனிருத்தையும் கைது செய்ய வேண்டும் என்கிறார்கள் ..?!!!!!!

இது எந்த விதத்தில் நியாயம்??!!!

பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள் என்று சொல்ல தான் வேண்டும் ..

வேறு என்ன செய்ய !!!

பெருமாள் முருகனுக்கு ஒரு நியாயம் சிம்புவுக்கு ஒரு நியாயமா திராவிட நாத்திக அமைப்புகளே ??!!

எழுதியவர் : அருண்வாலி (12-Dec-15, 2:39 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 396

மேலே