மனிதம் மட்டுமே
மனிதம் மட்டுமே!
காடுகள்
தொலைந்ததில்…
கிராமங்கள் ஆனது!
கிராமங்களின்..
தொலைதலில்…
நகரங்கள் ஆகுது!
நகரங்கள்
தொலைவதில்…
மாநகரங்கள் பெருகுது!
தொலைபேசி தொலைந்ததில்..
கைபேசி வந்தது.
காகிதங்கள் தொலைதலில்..
கணிணிகள் பெருகியது
மண்அடுப்பு மறைந்ததால்…
எரிவாயு அடுப்பு எரிகிறது
மாநகரங்கள் பெருகியதில்…
பண்பாடும்…..நாகரீகமும்….!
தொலையலாம்.!
தொலையாதது
மனிதம் மட்டுமே
மனிதனுக்கானது!.
மனிதம்தானே!
---கே. அசோகன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
