இதுதான் யதார்த்தம்

இதுதான் யதார்த்தம்!
அம்மாவின் கைருசி
மறக்க இயலவில்லை!
அதனை…
மனைவியிடம்
சொல்ல இயலவில்லை!

அப்பாவின் அறிவுரையை
அன்று நான் கேட்கவில்லை!
இன்றோ மகனுக்கு
கூற இயலவில்லை!

பள்ளி நினைவுகள்
மறக்க இயலவில்லை
பாடங்கள்தான் மனதில் இல்லை

காதலியை மறக்க முடியவில்லை!
மனைவியிடம்
இயம்ப இயலவில்லை!

இனிதாய் வாழ்கிறேன்
இதுதான் யதார்த்தமென்றே….
குரல் ஒலித்தது
யாரோடது அது..? .

- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (12-Dec-15, 8:37 pm)
பார்வை : 139

மேலே