நீயெனக்கு நானுனக்கு

நீயெனக்கு உயிரெழுத்து
நானுனக்கு மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் சேர்ந்து வாழ
ஆவோம் அழகிய கையெழுத்து...
நீயொரு மெல்லினம்
நானோ சிலநேரம் வல்லினம்
சிரிப்பும் கண்ணீரும் கலந்து இருக்க
வாழ்வில் வேண்டும் இடையினம்...
நீயெனக்கு உயிரெழுத்து
நானுனக்கு மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் சேர்ந்து வாழ
ஆவோம் அழகிய கையெழுத்து...
நீயொரு மெல்லினம்
நானோ சிலநேரம் வல்லினம்
சிரிப்பும் கண்ணீரும் கலந்து இருக்க
வாழ்வில் வேண்டும் இடையினம்...