கடமையை செய்திடுவோம்

காட்சிப் பிழைகள் தவறுமல்ல
சாட்சிப் பிழைகள் நிரந்தரமல்ல
ஆட்சிப் பிழைகள் அன்றோ
அல்லல் என்றும் அகிலத்தில்
அவதியுறுவது மக்கள் தான்
அன்றும் இன்றும் என்றும். ...
முடிவுதான் என்ன
விடிவுதான் என்று. ..
நிந்திப்பதை விடுவோம்
சிந்திக்கத் தொடங்குவோம்
கடந்ததை நினைக்காமல்
காலத்தில் முடிவெடுத்து
தலைமுறை தழைத்திட
களைதனை நீக்கிடுவோம்
மடமையை அகற்றுவோம்
கடமையை செய்திடுவோம் !
பழனி குமார்
12.12.2015