நானெனும் அவள்

எழுத்துகள் ஒவ்வொன்றாக சேர்த்து
சொற்கள் பல கோர்த்தேன்...
கோர்த்த சொற்களில் உன் பெயர் சேர்த்தேன்
என் வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகளாகின...
மொழிகளில் எதிலும் காணாத அர்த்தங்களை
சத்தமின்றி வரும் உன் பார்வையில் உணர்கிறேன்...
என் இதயம் உன் பெயர் பதித்த வாசகங்களுடன்
என் ஆயுள் முழுதும் சுமந்து இருக்கும்..
உன்னையும் என்னையும் இணைக்கும் இந்த காதலில் உணர்கிறேன்
காதலுக்கும் ஆயிரம்மடங்கு உயிருண்டென்று..