அவள்

என் கண்கள் கவர்ந்த காதலியே
என் கனவு முழுதும் நிறைந்திருப்பவளே..

குளிர் வந்தால் உன் மார்புக்குள் சுருள்வேன்...
மழை வந்தால் உன் முந்தானைக்குள் ஒதுங்குவேன்...

குளித்து வர கூந்தல் கேட்பேன்
தலை கோத விரல்கள் கேட்பேன்...

ஓய்வுக்கு ஓடி வருவேன்
அது உன் மடியினில் இருக்க யாசகம் கேட்பேன்...

பசியென வந்து இதழ்கள் கேட்பேன்
முடியாத பசியென்று விடாமல் சுவைப்பேன்...

உன்னோடு வாழ்ந்து உன் கண்களை பார்த்தபடியே
உன் மடியில் மரணிக்கே வேண்டுவேன்...

எழுதியவர் : பர்ஷான் (14-Dec-15, 4:32 pm)
Tanglish : aval
பார்வை : 68

மேலே