பாவம் மேஹனா தேவதைகள்
*எஸ்.எம்.எஸ்.சில்
எத்தனையோ பேர்...
*இ மெயிலில்
ஆயிரமாயிரம் ...
*டுவிட்டரில்
இன்னும் அதிகம் ...
*ஃ பேஸ்புக்கில்
இறைவன்தான் இல்லை ...
*யு டியூப்பிலும்
வாட்ஸ் அப்பிலும்
ஏதேதோ
என்னைச் சார்ந்தே ...
*ஹய்யோ..டா
முடியவில்லை என்னால் ..!
*'பிராக்கெட்'
புரியாதவளா நான் ..!
*எந்த
பிராஜெக்டும்
ஃ பெர்பெக்டா இல்லை..!
*டேட்டிங்கில்
பார்ட்னரைத் தேர்ந்தெடுக்க
கிளம்பித் தெளிகிறேன்
சில வருடமாய் ..!
*இங்கே ...
இவன் யார் ..? - என்
எதிரே எப்போதும் ...
வெள்ளை ரிப்பனோடு
வீதியில் ..!
*கூப்பிட்டுக் கேட்டதில்
" மாரியம்மா..." என
மகிழ்ந்தான் ...
நெகிழ்ந்தான் ...
நெளிந்தான் ...
" மேஹனா " என
என் பெயர்
மாறியது அறியாமல்...!
*பாவம் ...!
புரிந்துகொண்டேன் - அதே
அழகுராசுவேதான்...!
*இவனை
என்ன சொல்லித் தேற்றுவது ...
பத்தாம்வகுப்பு
படிக்கும்போது ;
என்னால்
இவனுக்கு
ஏற்பட்ட காதலை...!