பெண்ணே நீயே நீயே

பெண்ணே!!!
பாட்டிலே வரிகளாய் நீயே!
வரிகளிலிலே வார்த்தைகளாய் நீயே!
வார்த்தையிலே எழுத்துகளாய் நீயே!
எழுத்திலே உயிர் மெய் நீயே!
மெய்யிலே கண்ணாய் நீயே!
கண்ணிலே கருவிழியாய் நீயே!
கருவிழியின் பார்வையாய் நீயே!
பார்வையின் திறனாய் நீயே! நீயே !

ஏழையின் பசியாய் நீயே!
பசியிலே உணவாய் நீயே!
உணவின் சுவையாய் நீயே!
சுவையிலே தமிழாய் நீயே!
தமிழின் பழமையாய் நீயே!
பழமையின் அருமையாய் நீயே! நீயே!

கேட்கும் இசையாய் நீயே!
இசையின் மொழியாய் நீயே!
மொழியின் பயனாய் நீயே!
பயனின் விளைவாய் நீயே!
விளைவில் நன்மையாய் நீயே! நீயே!

பால்வளியிலே புவியாய் நீயே!
புவியிலே மண்ணாய் நீயே!
மண்ணிலே மரமாய் நீயே!
மரத்திலே இலையாய் நீயே!
இலையின் நிழலாய் நீயே!
நிழலின் இருளாய் நீயே!
இருளின் நிறமாய் நீயே! நீயே!

நிறத்திலே வெண்மையாய் நீயே!
வெண்மையிலே பாலாய் நீயே!
பாலிலே நீராய் நீயே!
நீரிலே கடலாய் நீயே!
கடலிலே உவர்ப்பாய் நீயே! நீயே!

கொடுப்பதிலே பாரியாய் நீயே!
கொட்டுவதிலே மாரியாய் நீயே!
ஆறிலே காவிரியாய் நீயே!
காவிரியின் கல்லணையாய் நீயே
கல்லணையின் வலிமையாய் நீயே!

வலிமையிலே மூவேந்தராய் நீயே!
மூவேந்தரின் முடியாய்(கிரீடம்) நீயே!
முடியின்(மயிர்) கருமையாய் நீயே!
கருமையின் இருளாய் நீயே!
இருளின் பகையாய் நீயே! நீயே!

மனதிலே கோவிலாய் நீயே!
கோவிலிலே கொடிமரமாய் நீயே!
கொடிமரத்திலே கொடியாய் நீயே!
கொடியிலே துணியாய் நீயே!
துணியிலே நூலாய் நீயே!
நூலிற்கு பருத்தியாய் நீயே! நீயே!

ஊரிலே வீதியாய் நீயே!
வீதியிலே பாதையாய் நீயே!
பாதையிலே கல்லாய் நீயே!
கல்லிலே மண்ணாய் நீயே!
மண்ணிலே துகளாய் நீயே!
துகளிலே மூலக்கூறாய் நீயே! நீயே!

விழித்தால் அறையெல்லாம் நீயே!
அறையின் சுவராய் நீயே!
சுவரில் ஓவியமாய் நீயே!
ஓவியத்தில் அற்புதமாய் நீயே!
அற்புதத்தில் தாஜ் மகாலாய் நீயே! நீயே!

கோவிலிலே நந்தவனமாய் நீயே!
நந்தவனத்தில் கோலமயிலாய் நீயே!
கோலமயிலிலே ஆணாய் நீயே!
ஆணின் வீரமாய் நீயே!
வீரத்திற்கு தமிழ் மண்ணாய் நீயே! நீயே!
தமிழ் மண்ணின் உயிராய் நீயே
உயிரிலே உணர்வாய் நானே! நானே!

எழுதியவர் : செல்வா.மு (14-Dec-15, 6:43 pm)
பார்வை : 266

மேலே