கண்ணராவி காதல்

காதலிக்காதே நீயும்
காதலிக்காதே!
பார்வையாள வந்த காதல்
பலானத தேடுது!
இளவயது காதலெல்லாம்
இன்பத்துக்கு ஏங்குது!
பள்ளிக்கூட காதலெல்லாம்
பள்ளியறை தேடுது!
கல்லூரியில் காதலெல்லாம்
கற்பனையில் மிதக்குது!
நட்பு கூட
நாளடைவில்
காதலாக முடியுது;
கடலை போடும் காதலெல்லாம்
கடற்கரையில் திரியுது!
தியேட்டரிலே பார்த்தகாதல்
தெருவெல்லாம் சிரிக்குது!
வீதியில கண்ட காதல்
விளம்பரத்த தேடுது!
சன்னல் வழி காதல்கூட
சங்கடத்தை தருகுது!
கதவிடுக்கு காதல்கூட
கதைகதையா பேசுது!
எட்டி பார்த்த காதலெல்லாம்
ஏக்கத்திலே தொடருது!
சொந்தம் மறந்த காதல்கூட
சோகத்தில வாடுது!
சேர்ந்த காதல் கூட இங்கு
சேத்த வாரி இறைக்குது!