வாழையடி வாழை

* 'மானம்
மரியாதை ' என
முறுக்கிய
மப்புத் தாத்தாவின்
மீசையை

உறங்கும்போது
மழித்து விட்டான் பேரன்...!

* காலையில்
பெருங்கலவரம் மூண்டு ;

நிகழ்வு புரிந்து
தன்னுள் முனகுகிறார்...

' நான் ...
தலைமுடியையும்
சேர்த்து மழிச்சேன் ;

பெயபுள்ள...
இது எவ்வளவோ
பரவாயில்ல ...! '

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (14-Dec-15, 6:47 pm)
Tanglish : valaiyadi vaalai
பார்வை : 74

மேலே