காதலிக்க சொல்லும் மனைவி

சிறு வயதிலிருந்தே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்கள்.
விவரம் தெரியும் வயது வந்தவுடன் நட்பு காதலாக மாறியது. ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும் உடனே வா!
என்றழைக்கிறாள் காதலி.

பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். என்னாச்சு என்று கேட்கையில் நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டது, எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். நாம் எங்கேயாவது ஓடிவிடலாம். என்று சொல்லி இன்னும் சத்தமாக அழுகிறாள்.

காதலனோ
வறுமையில் பிறந்தவன். நல்லா யோசித்து பெண் வீட்டில் இவளை முறைப்படி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்கிறான்.

ஆனால் அங்கு அவர்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் அழைத்த தனிமையில்....
என்று தவறாக நினைத்து பயங்கரமாக அடிக்கின்றனர்.

முகமெல்லாம் இரத்தம் சொட்ட தன் காதலனை பார்த்தவள்
அய்யயோ! அடிக்காதிங்க! நாங்க ஒரு தப்பும் செய்யல... அவன் பாவம்... அடிக்காதிங்க.... எங்களை வாழ விடுங்க.".

இவளை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் வேகமாக வீட்டிற்குள் ஓடி கத்தியை எடுத்துக் கொண்டு
"இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுதை அறுத்துக் கொள்வேன்" என்கிறான்.

நீ எனக்கு வேண்டாமடா! உன் மனைவியாக வாழ எனக்கு பாக்கியம் இல்லையடா! என்னை மறந்து விடுடா பொறுக்கி! ஆஆஆஆஆஆ. என்று மண்டியிட்டு மனம் நொந்து கதறி அழுகிறாள்.

நீ அழுகாதே செல்லமே! இப்போதுதான் எனக்கு மிகவும் வலிக்கிறதடி! என்று சொல்லி காதலனும் அழுகிறான்.

(தன் முதல் காதல். அதாவது இவ்வளவு கதையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.)

பிறகு என்னாச்சு!!! என்று கண் கசிந்தபடி மனைவி கேட்க என் மேல் police புகார் கொடுத்து 1 வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த நான் என் நண்பனை பார்க்க சென்றேன். அப்போதுதான் தெரிந்தது என் நண்பனின் மனைவி தான் என் காதலி....

அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமல் வானத்தை பார்த்து அலறி
அழுகிறான்.

இப்போது தான் மனைவிக்கு கணவன் மீது காதல் வந்தது.
அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் மார்பில் முகம் பதித்து
நான் உன் பொண்டாட்டிடா! அவ போனா போகட்டுமே உனக்காக நான் இருக்கேன்டா தங்கம்!

நீ சாகுற வரையும் உன் கூட நான் இருப்பேன்டா அந்த பெண்ணை காதலித்தது போல் என்னை காதலிப்பாயடா? என்று அவள் கேட்க

இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் என் மனைவியா இவள் என்று வியந்து பார்க்கிறான்.

நான் உன் மனைவிடா என்று அவள் செல்லமாக கொஞ்சி சொல்ல அவளை தூக்கி அடியே ராச்சஷி நீ புரிந்துக்கொண்டாயே அதுவே போதுமடி என் தங்கம் என்கிறான்.

காதல் சிலர் வாழ்வில் இப்படித்தான் தொடர்கதையாகிறது..

எழுதியவர் : செல்வமணி (15-Dec-15, 1:19 am)
பார்வை : 681

மேலே