மறைந்திருந்து பார்க்கும்
சில நிமிடங்களை
ஒதுக்கிக் கொள்கிறது
சூரியன் கூட ..
மேகங்களின்
பின்னே
ஒளிந்து
உன்னை பார்த்தே
கடக்கிறது..
நானோ ..
ஒரு சாதாரண
மனிதன் ..
எப்படி ..
கடந்து போவேன்
உன்னைப்
பார்க்காமல் ..?
பொய்தான் ..
சொல்கிறேன் ..
வழியில்..
யாரையும்
பாரக்கவில்லை
என்று ..
என்
மனசாட்சியிடம்..
தினமும் ..
உன்னைப்
பார்த்து விட்டு
வரும் போதெல்லாம் ..
இல்லாவிட்டால்
அது...
அட்வைஸ்
செய்ய
ஆரம்பித்துவிடும் ..